விராட் கோலியின் இணையதள பக்கம் முடக்கப்பட்டது.

 

இறுதிப்போட்டியில் அடந்த தோல்விக்கு ,விராட் கோலியின் இணைய தளத்தை ஹேக் செய்து வங்காள தேச ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்காள தேச அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வென்றது.

இந்த போட்டியில் வங்காள தேச வீரர் லிட்டன் தாஸின் அவுட் சர்சையை ஏற்படுத்தியது. இவரது விக்கெட் குறித்த நடுவரின் முடிவால் கோபமடைந்த வங்காள தேச ரசிகர்கள் கோலியின் இணைய தளத்தை ஹேக் செய்துள்ளார்கள். வங்கதேசத்தைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி & இண்டெலிஜென்ஸ் (சிஎஸ்ஐ) என்கிற அமைப்பு இந்திய கேப்டன் கோலியின் இணையத்தளத்தை ஹேக் செய்துள்ளது. இறுதிப் போட்டியில் வங்காள தேசத்துக்கு எதிரான நடுவரின் முடிவு குறித்த புகைப்படங்கள் கோலியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எல்லா நாடுகளும் சம அளவில் நடத்தப்படவேண்டும். இது எப்படி அவுட் எனச் சொல்லுங்கள் என அதில் கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

Exit mobile version