விஜய்க்கு, விஜயகாந்த் வாழ்த்து…!

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல். இந்தப் படத்தில் நடிகர் விஜய் 3 கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் நடிகர் வடிவேலு, சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் பாடலை இணையத்தில் 35 கோடி பேர் பார்த்தது சாதனையாக கருதப்படுகிறது. இந்நிலையில், மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதை நடிகர் விஜய் பெற்றுள்ளார்.

விருது பெற்ற விஜய்க்கு, விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக “சிறந்த சர்வதேச நடிகர்” என்ற விருதை வென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version