ரயிலில் இருந்து விழுந்ததில் 4 பேர் பலி

சென்னை கடற்கரையில் இருந்து, தாம்பரம் மார்க்கமாக செல்லும் மின்சார ரயிலில், இன்று காலை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். வழக்கமாக, 2வது தடத்தில், செல்லக்கூடிய  ரயில், கோடம்பாக்கம் மற்றும் மாம்பலம் இடையே மின் கம்பி அறுந்ததால், இன்று 4வது தடத்தில் மாற்றி இயக்கப்பட்டது. இதனால், படிகட்டில் தொங்கியபடி  சென்ற 10 மேற்பட்ட பயணிகள், தண்டவாளம் அருகில் உள்ள பக்கவாட்டு கான்கிரீட்  சுவரில் மோதி, தண்டவாளத்தில் தவறி விழுந்தனர். இதனால்,  சுவற்றுக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர்  லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதனிடையே, உயிரிழந்தவர்கள் 5 பேரும், பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, சென்னை கூடுதல் காவல் ஆணையர்  சாரங்கன், விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தினார்.

Exit mobile version