மீண்டும் மறுப்பு தெரிவித்த மத்திய அரசு

 

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைமை நீதிபதியாக யாரும் நியமிக்கப்படவில்லை. நீதிபதி கீதா மிட்டல் பொறுப்பு நீதிபதியாக இருந்து வருகிறார்.  இந்தநிலையில், டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு கொலீஜியம் பரிந்துரைத்த கொல்கத்தாவை சேர்ந்த நீதிபதி அனிருத்தா போசின் பெயரை ஏற்க மறுத்து மத்திய அரசு மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி மிகவும் முக்கியமானது என்பதால் திருப்பி அனுப்புவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. வேறு உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக அனிருத்தாவை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும் அதில் தெரிவித்துள்ளது.

Exit mobile version