சென்னை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 8 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் சீரமைப்பு, திருத்தம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தயார் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
18 வயது நிறைவு பெற்ற முதல் முறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்வது தொடர்பாகவும், வாக்கு பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது பற்றியும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கபட்டது.