பூம்புகாரில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் இல்லத் திருமண விழா, நாகை மாவட்டம் பூம்புகாரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் பயணித்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வந்த அவருக்கு டிவி. நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக திரண்டு அவரை வரவேற்றனர். 

Exit mobile version