பல் மருத்துவ படிப்பு – இன்று சான்றிதழ்களுடன் நேரில் வந்தால் சீட்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பல் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன் இன்று மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு நேரில் வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பல் மருத்துவப் படிப்பில் இன்னும் 330 இடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பல் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன் இன்று சென்னையில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு நேரில் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இந்த இடங்களை நிரப்ப, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, இன்றும், நாளையும் சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

பல் மருத்துவப் படிப்பில் சேர இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன் இன்று மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு நேரில் வரலாம் என்றும், அதேபோல் ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள், நாளை நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும், மருத்துவக்கல்வி இயக்குனரக மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version