நெரிசலில் சிக்கி விஜய் காயம்?

நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் மற்றும் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ ஆனந்த் அவர்களின் மகன் திருமண வரவேற்பு நாவற்குளம் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் விஜய் பங்கேற்பதாக இருந்ததால், தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் மண்டபம் செல்லும் வழிநெடுக்க பேனர்களும், போஸ்டர்களும் வைக்கப்பட்டிருந்தன. அதன்படி, நேற்று மாலை நடைப்பெற்ற இந்த விழாவில் விஜய் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.

விஜய் மணமக்களை வாழ்த்த மேடையை நோக்கி செல்ல முற்பட்டபோது ரசிகர்கள் கூச்சலிடத் தொடங்கினர். இதனால் விஜய் தனது மனைவியுடன் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். 

 காரில் ஏறச் சென்றபோது, அவரது காலில் காயம் ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.  பின்பு போலீசார் உதவியுடன் விஜய் காரில் ஏறிப் புறப்பட்டார்.

மேலும் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மண்டப சேர்கள் ஆங்காங்கே பறந்தது மட்டுமல்லாமல் சாப்பாடு கூடத்திலும், தாம்பூலம் கூடத்திலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரால்  தடியடி நடத்தப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பதற்றம்  நிலவியது.

Exit mobile version