ட்விட்டர் டிரெண்டில் தெறிக்க விடும் "பிகில்" ட்ரெய்லர்

பிகில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும் நிலையில், இந்திய அளவிலான ட்விட்டர் டிரெண்டில் #BigilTrailerDay முதலிடத்தில் உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் “பிகில்”. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இயக்குநர் அட்லி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். சமீபத்தில், படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், “பிகில்” படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்படும் என்று படக்குழு சார்பில் அறிவித்திருந்தனர். இதனையொட்டி ட்விட்டர் வலைதளத்தில் #BigilTrailerDay என்ற ஷேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் #BigilTrailerFromToday என்ற மற்றொரு ஷேஸ்டேக்கையும் பதிவு செய்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Exit mobile version