தூய்மை பணியில் ஆளுநர்! 

காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, ஆளுநர் மாளிகையில் பள்ளி மாணவ மாணவிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை பணிகளில் ஈடுபட்டார். 

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தாநாளையொட்டி சென்னை ராஜ் பவனில், தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

தொடர்ந்து தூய்மை குறித்த உறுதிமொழியை கவர்னர் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் ஆளுநர் மாளிகையில் மாணவர்களுடன் குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

முன்னதாக மேடையில் பேசிய ஆளுநர், தூய்மை பணியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளி பருவத்தில் இருந்தே தூய்மையாக வைத்திருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

 

 

 

Exit mobile version