துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குத்வானி அருகே உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள், கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறை அதிகாரி ஒருவரை கடத்தி சென்று கொன்றவர்கள் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version