திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, கட்சி பணிகளில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், இன்று வழக்கமான உடல் பரிசோதனைக்காக, திமுக தலைவர் கருணாநிதியை அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து, மருத்தவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதிக்கு தொண்டை பகுதியில்  டிரக்கியோஸ்டமி கருவி மாற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version