தமிழக வீரர் ஆரோக்கிய ராஜுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை

இந்தோனியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்போட்டியில் தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ் வெள்ளி பதக்கம் வென்றார். அவருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 30 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார். மேலும் அவர் பல வெற்றிகளை பெற வேண்டும் எனவும் தனது கடிதத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 400 மீட்டர் ஆடவருக்கான தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீர ர் தருண் அய்யசாமிக்கு நேற்று 30 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version