இளையோர் ஒலிம்பிக் – மும்முறை நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீரர் அசத்தல்

அர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்திரைவேல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

3-வது இளையோர் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் போட்டியில் (மும்முறை நீளம் தாண்டுதல்) தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்திரைவேல் வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.

மொத்தம் 31.52 மீட்டர் நீளம் தாண்டிய பிரவீன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை சொந்தமாக்கினார். சர்வதேச அளவில் பிரவீன் சித்திரைவேல் வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version