தமிழகத்தை தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா – அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், அறிஞர் அண்ணாவின் சிறப்புகளை எடுத்துரைத்தார். தமிழகத்தில் போர்டு கார் கம்பெனியை கொண்டுவந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று சுட்டிக்காட்டிய அவர், ஹுன்டாய் உள்ளிட்ட கார் கம்பெனிகள் தமிழகத்திற்கு வர காரணமாய் இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று கூறினார். இதன்மூலம் உலக அளவில் கார் உற்பத்தியில் தமிழகம் எட்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டுவந்ததன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும்மேல் ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தவர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில் பண்ருட்டி அதிமுக நகர செயலாளர் தாடி.முருகன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version