டிக்கெட் முன்பதிவில் காப்பீடு வேண்டுமா? வேண்டாமா?

ரயில் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் போது 1 ரூபாய் காப்பீடு தொகையாக ரயில்வே நிர்வாகம் வசூலித்து வருகிறது. இ.டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த வசதி உள்ளது.இந்நிலையில் வரும் 1 ஆம் தேதி முதல் பயணிகளின் விருப்பதின் பேரிலே காப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவில் காப்பீடு வேண்டுமா? வேண்டாமா? என்ற என்ற பகுதி இடம் பெற்றிருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. காப்பீடு செய்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பட்சத்தில் 10 லட்சம் ரூபாயும் காயம் அடையும் பட்சத்தில் 7 லட்சத்து 50 ரூபாயும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version