கேரளாவில் தொற்றுநோய் பரவும் அபாயம்

கேரளாவில் வெள்ள நீர் வடிய தொடங்கியநிலையில், பல இடங்களில் கால்நடைகள் இறந்துகிடப்பதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் தேதி முதல் கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆலுவா, சாலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது.
ஆனாலும், சேறு சகதியும் நிரம்பி இருப்பதால் நிவாரண பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

செங்கனூர், வெண்மணி, தாண்டநாடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. கால்நடைகள் உயிரிழந்து கிடப்பதால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் துரிதப்படுத்தி உள்ளனர்.

வீடுகளுக்குள் பாம்பு, தேள் உள்ளிட்டவை புகுந்து இருப்பதால், மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

   

 

Exit mobile version