காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,  ஜம்மு காஷ்மீர் மாநில  பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால், அப்பகுதியில் பதற்றமான சூழவுகிறது.

 

Exit mobile version