காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும்!!!

மேகதாது அணை கட்டுவதில் தமிழகத்தை சமாதானம் செய்யும் வகையில், விரைவில் தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கலாம் என்றும், புதிய அணையால் தமிழகம், கர்நாடகா இரண்டு மாநிலங்களுமே பயன்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மேகதாது அணையை 5 ஆயிரம் ஏக்கரில் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கான ஒப்புதலை முந்தைய கர்நாடக காங்கிரஸ் அமைச்சரவை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version