காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது – முதலமைச்சர் பாராட்டு

மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து விதமான காவலர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ராணுவத்தில் கூட இதுபோன்ற பயிற்சி இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இதற்காக 358 முதன்மை பயிற்சியாளர்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இதற்கான, துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவல் துறையினர் உயிரை பணயம் வைத்து மக்களை காத்து வருவதாகக் குறிப்பிட்டார். புயல், மழை என இயற்கை பேரிடர் காலத்திலும் அவர்கள் சிறப்பாக பணியாற்றுவதாக அவர் பாராட்டினார்.

காவலர்களின் நலன் காக்க தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பட்டியலிட்ட முதலமைச்சர், குற்றங்களை கண்டுபிடிப்பதிலும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதிலும் தமிழகம் முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதாகத் தெரிவித்தார். காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க தமிழக அரசு செயல்படுத்தும் நிறைவாழ்வு பயிற்சி குறித்து முதலமைச்சர் விளக்கமாக எடுத்துரைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயகுமார், கே.பி, அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல்துறையின் இந்நாள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version