கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல் –  காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு! 

சென்னை தாம்பரம் அருகேயுள்ள இரும்புலியூரில் வழிப்பறியில் ஈடுபட்டதாக காவல் ஆய்வாளர் தாம்சன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் தாம்சன் மீது பீர்க்கங்கரணை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இரும்புலியூரில் முத்தையா என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வாங்கி சென்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து தாம்சன் மீது வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள தாம்சன் லஞ்ச வழக்கில் சிக்கி ஏற்கனவே காத்திருப்போர் பட்டயலில் உள்ளது 

Exit mobile version