கபடி வீராங்கனையாக கங்கனா ரனாவத் ?

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் ஜான்சி ராணியின் கொண்ட மணிகர்ணிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜான்சி ராணியின் வாழ்க்கையை தவறாக சித்தரிப்பதாக இந்தப் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து படப்பிடிப்பு அரங்கிற்கு தீ வைக்கப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கபடி வீராங்கனை குறித்த படம் ஒன்றில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார். அஸ்வினி அய்யர் திவாரி இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த அம்மா கணக்கு படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version