“ஓரின சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல!” – சொன்னது யார் தெரியுமா?

ஓரின சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 377-ன் படி, இயற்கைக்கு மாறாக ஆண், பெண் அல்லது விலங்கினங்களுடனான உறவு தண்டனைக்குரியதாகும். இந்தநிலையில், கடந்த 2009-ல் இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இயற்கைக்கு மாறான உறவு சட்டவிரோதமல்ல என உத்தரவிட்டது. 2013-ஆம் ஆண்டு இந்த உத்தரவுக்கு இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு தடைவிதித்தது.

இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் நாஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பிரிவு 377 தொடர்பாக உச்ச நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கினாலும் அதனை ஏற்றுக் கொள்வதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்தநிலையில், ஓரினச் சேர்க்கை திருமணம் குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இருவர் விரும்பி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றமல்ல என்றும், அதனை குற்றம் என்று கருத முடியாது எனவும் தெரிவித்தனர்.

இருப்பினும் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணைத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version