ஏன் பதவி விலகுகிறார் சந்திர சேகர ராவ்? – காரணம் இது தான்!

சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தெலுங்கானா ராஸ்ட்ரிய சமீதி கட்சி மாநாட்டில் அம்மாநில முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அதே நாள் தனது மந்திரி சபையை கூட்டியும் அவர் விவாதித்தார். இதனால் தெலுங்கானா அரசு முன்னதாகவே கலைக்கப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இன்று 2 வது முறையாக மந்திரிசபையை கூட்டினார். இந்த கூட்டத்தில் தெலுங்கானா அரசை கலைக்க பரிந்துரைக்கபட்டது. இந்த பரிந்துரையை முதல் அமைச்சர் சந்திர சேகரராவ் இன்று கவர்னர் நரசிம்மனை சந்தித்து வழங்கினார். இதை ஏற்றுக்கொண்ட கவர்னர் மாநில அரசை கலைத்து உத்தரவிட்டார். மேலும் காபந்து அரசின் முதல் அமைச்சராக சந்திரசேகர ராவை நீட்டிக்க கேட்டுக்கொண்டார்.
தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டதை அடுத்து, நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களுடன் தெலுங்கானாவிலும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திர சேகர ராவ் இவ்வளவு அதிரடியாக சட்டப்பேரவையை கலைத்ததற்கு காரணம் மீண்டும் தேர்தல் நடைபெற்றால் அவர் தான் பெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. தனி தெலங்கானாவை பெற்றுத் தந்தவர் என்ற இமேஜ் அவருக்கு இருப்பதும், தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு  வேறு எந்த கட்சியும் பெரிய அளவில் வலுவாக இல்லாததும் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது.  இதன் காரணமாக முன்கூட்டியே சட்டப்பேரவை கலைத்துள்ளார் சந்திரசேகர ராவ். 

Exit mobile version