"எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது" – பா.ஜ.க. குற்றச்சாட்டு

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பாகிஸ்தானும் இணைந்துள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம்சாட்டி உள்ளார்.

ரபேல் போர் விமான முறைகேடு உள்ளிட்ட பல விவகாரங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. பிரதமர் மோடி மீதும் மத்திய பாஜக அரசு மீதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ராகுல் காந்தியை பெரிய தலைவராக்க சிலர் விரும்புவதாக குறிப்பிட்டார். இதன் பின்னணியில் பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். அவர்கள் ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்பதாக சம்பித் பத்ரா தெரிவித்தார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பாகிஸ்தானும் இணைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பிரதமர் மோடியை இந்திய அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுக்கும் உள்ள ஒரே குறிக்கோள் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், ஏழை மக்கள் பிரதமர் மோடியின் பின்னால் நிற்பதாக சம்பித் பத்ரா தெரிவித்தார்.

Exit mobile version