இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்து, அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை  காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேசுவரம் மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், இரு வாரங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டநிலையில்,  மீண்டும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version