இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற விஜய் மல்லையா சிறை செல்வதை தவிர்க்கும் முயற்சி

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்த வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா,  தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாததால், அவரை இந்தியா அழைத்து வர அமலாக்கத் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில் லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதில் மல்லையாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால், அவர் இந்தியா அழைத்து வரப்பட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், அதிக நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய வாய்ப்புகள் உள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதனை தவிர்ப்பதற்காக, இந்திய அதிகாரிகளுடன் விஜய் மல்லையா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.         

Exit mobile version