அதிமுகவை அசைக்க முடியாத திமுக – தமிழிசை

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வேண்டும் என பாஜக நினைப்பதாகவும், ஆனால், எதிர்மறையான அரசியல் நடத்தப்படுவதாகவும் கூறினார்.

பாஜக ஒழிக என்று கூறி வரும் ஸ்டாலின், கள்ளத் துப்பாக்கி, பிரியானி கடையில் பிரச்சினை, அழகு நிலைய பெண் மீது தாக்குதல் என அடாவடியாக கட்சி நடத்தி வருவதாக தமிழிசை விமர்சித்தார்.

அதிமுகவை அசைக்க முடியாத திமுகவால் பாஜகவை என்ன செய்ய முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதில் திமுக, காங்கிரசுக்கு பெரும் பங்கு இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version