சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்…
அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 4 ஆயிரத்து 82 பேரும், தேனாம்பேட்டையில் 3 ஆயிரத்து 844 பேரும், கோடம்பாக்கத்தில் 3 ஆயிரத்து 409 பேரும், அண்ணாநகரில் 3 ஆயிரத்து 150 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திரு.வி.க. நகரில் 2 ஆயிரத்து 922 பேரும், அடையாறில் ஆயிரத்து 809 பேரும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 395 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூரில் ஆயிரத்து 171 பேருக்கும், அம்பத்தூரில் ஆயிரத்து 105 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post