ரன்வீர் சிங் ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்து கொண்டு சென்ற கண்ணாடியை, தனது கண்ணாடி என ஷிவா தோனி சொல்லியது வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் பார்ப்பவர்கள், பார்க்காதவர்கள் என அனைவருக்குமே தோனி தான் பிடிக்கும்.அவர பிடிக்கிறப்போ அவரோட செல்ல மகளான ஷிவாவை பிடிக்காத என்ன, ஆமா ஷிவா தோனிக்காக ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கு.அடிக்கடி இருவரின் செல்ல சேட்டை வீடியோ இணையத்தில் வைரலாகும்.அதே போல் இந்த முறையும் ஷிவாவின் குறும்பு வைரலாகி உள்ளது.
இந்நிலையில் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் ஷிவாவின் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படத்திற்கு கீழே, ’ஷிவா இந்த கண்ணாடியை பார்த்து அப்பா இவர் என்னோட கண்ணாடியை அணிந்திருக்கிறார் என கூறிவிட்டு, மாடிக்கு சென்று தனது கண்ணாடியை எடுத்துக்கொண்டு ’எனது கண்ணாடி என்னிடம் தான் இருக்கிறது’என கூறியுள்ளார்.
’இந்த காலத்து குழந்தைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்கள்.ஷிவாவின் வயதில் என்னிடம் இப்படி ஒரு கண்ணாடி இருப்பதே எனக்கு ஞாபகம் இருக்காது எனவும், அவள் அடுத்த முறை ரன்வீரை பார்க்கும் போது உங்களிடம் இருக்கும் கண்ணாடியை போல என்னிடமும் இருக்கிறது என்று நிச்சயமாக தெரிவிப்பார் என தோனி பதிவிட்டுள்ளார்.இதற்கு ரன்வீர் சிங் HAHAHA..FASHIONISTA Z என கமெண்ட் செய்துள்ளார்.தோனியின் இந்த பதிவு தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.