ஆந்திராவில் புத்தலப்பட்டு தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். ஆந்திரா சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. பல இடங்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
புத்தலப்பட்டு தொகுதியில் இரு கட்சித் தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டதால் வாக்காளர்கள் அச்சமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர்.
Discussion about this post