இளம்பிள்ளை அருகேயுள்ள தப்பகுட்டை பகுதியினுடைய ஏரியை சுத்தம் செய்து அங்கு 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்த இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள தப்பகுட்டை கிராமத்தில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியானது முற்றிலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து இருந்தன. இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியில் படர்ந்து விளைந்திருந்த சீமை கருவேலமரங்களை ஜேசிபி இயந்திரங்களின் மூலம் அகற்றி 2,000 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இயற்கை வளத்தை மேம்படுத்தி நீராதாரத்தை பெருக்கும் வகையில் இந்தப் பணியை மேற்கொண்டதாக சமூக ஆர்வலர்கள் கூறினர். இந்தப் பகுதியில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்து 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவதே தங்கள் நோக்கம் என்று அவர்கள் தெரிவித்தனர்.