நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி 2வது முறையாக மீண்டும் பிரதமராகிறார்.
நேற்றைய தினம் நாடு முழுவதும் திரும்பும் இடமெல்லாம் தேர்தல் முடிவுகளை பற்றி அறிந்துக் கொள்வதில் மக்கள் ஆர்வமாக இருந்தனர். மீடியாக்களும் அதற்கேற்றவாறு செய்திகளை வழங்கிய வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்வதற்காக மும்பையில் இளைஞர் ஒருவர் வித்தியாசமான செயலை செய்தார். அவர் முதுகில் ஒரு டிவியை கட்டிக்கொண்டு அதில் தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகளை ஒளிபரப்பினார். இதனை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர். இவரது இந்த செயலை பரபரப்பான சூழலிலும் மக்களிடையே வைரலாக பரவியது.
Discussion about this post