ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே போய்க்கொண்டா என்ற இடத்தில் பாறை மீது நின்று செல்பி எடுக்க முயன்ற வாலிபர் 30 அடி பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். போய்க்கொண்டாவில் பிரசித்த பெற்ற கங்கம்மா மலைக் கோயிலுக்கு, குடும்பத்தினருடன் சாமி கும்பிட வந்த ஆந்திர மாநில இளைஞர் ஒருவர், பாறையின் மீது நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி 30 அடி பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செல்பி எடுக்க முயன்று 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர்
-
By Web Team

Related Content
ஒடிசா நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு
By
Web Team
December 31, 2018