தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு 20 லட்சம் மதிப்புள்ள போதை தரக்கூடிய ஹாஸஸ் ஆயீலை கடத்த முயன்ற இளைஞரை மத்திய போதை தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து பெங்களூருக்கு சென்ற தனியார் பேருந்தில் ஹாஸஸ் என்ற போதை பொருள் கடத்திவரப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தனியார் பேருந்தை மடக்கி சோதனையிட்ட போது , கஞ்சாசெடியின் மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் ஹாஸஸ் ஆயிலை கடத்திய பெங்களூரை சேர்ந்த அப்துல்கரீம் என்பவர் கைது செய்யபட்டார். மேலும் பரிமுதல் செய்யப்பட்ட 970 மில்லி கிராம் ஹாஸஸ் ஆயிலின் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அப்துல்கரீம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Discussion about this post