மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா என்ற அந்த இளைஞர், பெட்ரோல் பங்கில் கொடுத்த 50 ரூபாயில் சந்தேகம் ஏற்பட்டது. 50 ரூபாய் நோட்டை பரிசோதித்த பங்க் ஊழியர்கள், கள்ள நோட்டு என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு பங்க் ஊழியர்கள் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், பிரசன்னாவிடமிருந்து ஆயிரத்து 50 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பிரசன்னா மீது 2 பிரிவின் கீழ், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Discussion about this post