புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய, இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கீரனூர் கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை அதே ஊரை சேர்ந்த முருகன் என்ற உறவுக்கார இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து அதனை சிறுமியின் தாயிடம் காட்டி, தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு மிரட்டியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் முருகனை கைது செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ, தகவல் தொழிநுட்ப சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
Discussion about this post