தங்கையிடம் காதலை வெளிப்படுத்திய இளைஞரை அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மேலக்கல்கண்டார் கோட்டை அடுத்த பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜாவித் உசேன். இவரை மர்ம நபர்கள் சிலர் நேற்று வெட்டிக்கொலை செய்யதனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜாவித் உசேனை கொலை செய்தது, அதே பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் சரவணகுமார் என்பது தெரியவந்தது. கமலக்கண்ணனின் 11ஆம் வகுப்பு படிக்கும் தங்கையிடம் ஜாவித் காதலை வெளிப்படுத்தியதாகவும், பல முறை கண்டித்தும் கேட்காததால் கொலை செய்ததாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
Discussion about this post