நாமக்கல் மாவட்டம் ஜம்புமடையில் வீடுகளில் திருமணம் முதலிய மங்கல விழாக்களின்போது கட்டாயம் மரம் நட வேண்டும் என இளைஞர்கள் முடிவெடுத்துள்ளனர்.
வீடுகளில் திருமணம் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற்றால், அவர்களது குடும்பத்தின் சார்பில் கட்டாயம் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதனையொட்டி நமது கிராமம் என்ற திட்டம் ஏற்படுத்தி மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் இருவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இரு சோடிகளும் முதல் வேலையாக மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கி வைத்தனர். மரங்களை நடுபவர்களே அதனைப் பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத் தக்கது.
Discussion about this post