புதுச்சேரியில் யூ டியூப்பை பார்த்து ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியின் நகர பகுதியில் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தில், கடந்த 12ஆம் தேதி இரவு இளைஞர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். பணம் வராததால், ஏடிஎம்-ஐ உடைத்து பணம் திருடும் முயற்சியில் ஈடுபட்டபோது, அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பியுள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு உள்ள சிசிடிவியில் பதிவான காட்சி உதவிடன், கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை, வம்பாகிரப்பாளையம் பகுதியில் கைது செய்தனர். விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பதும், புதுச்சேரியில் பழக்கடை ஒன்றில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. செலவுக்கு பணம் இல்லாததால், யூ டியூப்பை பார்த்து கொள்ளையடிக்க திட்டமிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
Discussion about this post