நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இதனை தெரிவித்துள்ளார். நீட் தேர்வை அனைத்து மாநிலங்களும் ஏற்றுகொண்ட நிலையில் ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடம் கடுமையான சோதனை நடத்தப்படுவது குறித்த கேள்விக்கு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படியே மாணவ மாணவிகளிடம் சோதனை நடைபெறுவதாக பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார்.
Discussion about this post