ஆவின் பால் காலி பாக்கெட்டுகளை, முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளாம் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்தம் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று 2019-ம் ஆண்டு துவக்கத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் வகைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தமிழக அரசு விநியோகம் செய்யும் ஆவின் பால் பாக்கெட்கள், மறுசுழற்சிக்கு உகந்தவையாகும்.
இந்த நிலையில், பொதுமக்கள் ஆவின் பால் காலி பாக்கெட்டுகளை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளாம் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. காலி பாக்கெட்டை சில்லறை வணிகர்கள், விற்பனை நிலையங்கள், முகவர்கள், பால் கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து, பாக்கெட் ஒன்றிற்கு 10 பைசா பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post