தென்காசியில் உள்ள அரசுப் பள்ளியில் வாரம் ஒரு முறை யோகா வகுப்புக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவியர் யோகா விழிப்புணர்வு பெறும் வகையில், தமிழக அரசு சார்பில், வாரம் தோறும் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனை செயல்படுத்தும் வகையில் நெல்லை மாவட்டம் தென்காசி அரசு பள்ளியில், வாரம் ஒரு முறை யோகா வகுப்புக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அந்த பள்ளியில் படித்து யோகாவிற்கு பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர். தென்காசி வட்டார கல்வி அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில், ஒரே மாதிரியான உடை அணிந்து மாணவ மாணவிகள் யோகா செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்வி அதிகாரிகள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post