சேலம் மாவட்டத்தில் முதன் முறையாக, அரசுப் பள்ளியில் யோகா மற்றும் தியான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் உடல் ஆரோக்கியம், நினைவுத்திறன், நன்னெறி வளர்க்கும் நோக்கில் யோகா மற்றும் தியான வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், விழாவில் பல்வேறு கலைத்திறன் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Discussion about this post