வாராக்கடன்களால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய எஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்…
திருப்பி வராத வாராக்கடன்களால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய எஸ் வங்கியின் மொத்த நிர்வாகக் கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன்வசப்படுத்தியது. வங்கியின் மொத்த நிர்வாகமும் முடங்கியதால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து, எஸ் வங்கியின் நிறுவனரான ராணா கபூரிடம், மும்பையில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை ராணா கபூரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.