யெஸ் வங்கி மோசடி- ரூ.127 கோடி மதிப்பிலான குடியிருப்பை முடக்கியது அமலாக்கத்துறை

‘யெஸ்’ வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமாக, லண்டனில் உள்ள 127 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ’யெஸ்’ வங்கியில், 4,300 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்தது தெரியவந்தது. இது குறித்த சி.பி.ஐ., விசாரணையை தொடர்ந்து, ’யெஸ்’ வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், லண்டனில் உள்ள ராணா கபூருக்கு சொந்தமான 127 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Exit mobile version