கேரளாவில் 5 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதிலிருந்தே பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் உயிரிழப்பு அதிகளவில் இருந்தது. இதனால் ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தன. மழை அளவு குறைந்து இயல்புநிலை திரும்ப துவங்கியதால் பொதுமக்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், கேரளாவின் 5 மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என திருவனந்தபுர வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டையம், இடுக்கி, மலப்புரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழைபெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post