இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் எரிபொருள் வாகனங்களின் எண்ணிக்கையால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக வடமாநிலங்களில் மின் வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.இதை தொடர்ந்து மாநில அரசுகளும் அதை பின்பற்றுகின்றனர்.
அதன் ஒரு பங்காக மின்வாகனங்களுக்கு மானியம் வழங்குதல், சிறப்பு சலுகை வழங்குதல் மற்றும் வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு செய்து வருகின்றது. இதன்காரணமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் மின்வாகனங்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஹீரோ நிறுவனம் இந்தியர்களைக் கவர்கின்ற வகையில் இ-சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதனை யமஹா நிறுவனத்தின் கூட்டணியில் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய இ-சைக்கிளுக்கு லெக்ட்ரோ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. லெக்ட்ரோவின் வரிசையில் ehx20 என்ற மாடல்தான் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 1.3 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இ-சைக்கிளைப் பற்றிய தகவல் தற்போது மிகக் குறைவாகவே வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Discussion about this post