ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியானார்
ஆந்திர மாநிலத்தில் வாக்குப் பதிவுகள் நடைபெற்றும் வரும் நிலையில் ஆங்காங்கே ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அனந்தபுரம் மாவட்டம் தாடி பத்திரியில் நடந்த மோதலில் தெலுங்கு தேசம் கட்சியினரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த பாஸ்கர் ரெட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post