ரோம் நகரிலிருந்து பெறப்பட்ட புனித சவேரியாரின் புனித உடலின் பாகம் வத்தலக்குண்டிற்கு கொண்டு வரப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மேல கோவில்பட்டி ராணுவ கிராமத்தில் பழமையான புனித சவேரியார் ஆலயம் உள்ளது. ஆலயத்தினை புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இத்தாலி தலைநகர் ரோம் நகரில் பாதுகாக்கப்பட்டு வரும் புனித சவேரியார் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மிகச் சிறிய உடல்பாகம் ஊர் பொதுமக்கள் மற்றும் பங்குத்தந்தை ஜெயராஜ் முயற்சியினால் வத்தலக்குண்டு கொண்டு வரப்பட்டது. உடல் பாகத்தை தங்க பதக்கத்தில் வைத்து அதனை சவேரியாரின் புதிய சிலையில் பொருத்தினர்.
பின்னர் அந்த சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலயத்தில் நிறுவப்பட்டது. சிலையை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
Discussion about this post